விமானப் போக்குவரத்தின் போது ஸ்மார்ட் போன்களில் இருக்கும் ஏரோப்ளேன் மோடை எனபிள் செய்ய வேண்டுமென பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
உண்மையில் விமானப் போக்குவரத்தின்போது மட்டுமே ஏரோப்ளேன் மோட் பயன்படுத்த வேண்டும் என்றில்லை.
இந்த ஏரோப்ளேன் மோட் பல வகையிலும் எமக்கு உதவி புரிகிறது
.
கவனச் சிதறலை தடுக்கிறது– ஸ்மார்ட் போனை ஏரோப்ளேன் மோடில் வைக்கும் பொழுது அழைப்புகள், குறுஞ்செய்திகள் என எதுவித கவனச்சிதறலும் இல்லாமல் வேலை செய்ய முடியும்.
மருத்துவ உபகரணங்களின் பாதுகாப்பு – மருத்துவமனைகளிலுள்ள உணர்திறனான உபகரணங்களில் குறுக்கிடதா வகையில் ஏரோப்ளேன் மோட் எனபிள் செய்யப்படும்.
நெட்வேர்க்– சில நேரங்களில் ஸ்மார்ட் போன்களில் நெட்வேர்க் கிடைக்காமல் இருக்கும் வேளையில் ஏரோப்ளேன் மோடை ஆன் செய்து ஆஃப் செய்வதன் மூலம் நெட்வேர்க் சீராக கிடைக்கும்.
பேட்டரி – ஸ்மார்ட் போன் சிக்னலைத் தேடும்போது உங்கள் மொபைல் பேட்டரி எளிதில் காலியாகிவிடும். இதை தடுக்க வேண்டுமென்றால் ஏரோப்ளேன் மோட் உதவியாக இருக்கும்