தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தற்போது தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பொது வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரும் முகமாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின்போது தமிழ்ப் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கும்,
அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும் உப குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது என்று தெரியவருகின்றது.
பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.