சுற்றுலா ஹோட்டல்களின் தேவைக்காக பாசுமதி அரிசியைத் தவிர வேறு எந்த அரிசிகளையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்ட போது அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அப்போது, சில நாட்களுக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை அரிசி துறைமுகத்தில் சிக்கியதால், அந்த குறிப்பிட்ட அளவு அரிசியை விடுவிக்க ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது அந்த நேரம் முடிந்துவிட்டதாகவும் அமைச்சர் கூறினார்.