பிரித்தானியாவின் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்கம், 240 மில்லியன் பவுண்டுகள் சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் (48) தமது பெயரில் ஆடை, வாசனை திரவியங்கள் மற்றும் அணிகலன்களை விற்பனை செய்து வருகிறார்.
ஆனால், அவரது பிராண்ட் பெயரைப் பயன்படுத்தி போலியான பொருட்கள் ஒன்லைனில் விற்பனையாவதாக தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, தனது பிராண்டின் நற்பெயரை கெடுப்பதாகக் கூறி பெக்காம் வழக்கு தொடந்தார். இதுதொடர்பில், டேவிட் பெக்காம் (David Beckham) கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரது புகாரில், ‘அவர்களின் விற்பனை DBVயின் பிராண்டிற்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, அதன் வணிகத்தின் நிலைத்தன்மையையும் பாதிக்கிறது. மேலும், தெரியாமல் அவற்றை வாங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களையும் இது பாதிக்கிறது’ என கூறப்பட்டது.
தற்போது இந்த வழக்கில் டேவிட் பெக்காம் வெற்றி பெற்றுள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி, 44 பிரதிவாதிகளுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டது.
ஒவ்வொரு விதி மீறலுக்கும் 8,000 பவுண்டுகள் வழங்கப்படும் நீதிமன்றம் கூறியது. இதன்மூலம் மொத்தமாக மோசடி செய்தவர்களிடம் இருந்து 352,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 3 கோடியே 65 லட்சம்) பெக்காம் பெறுவார். இது பெக்காம் குழு கோரிய 240 மில்லியன் பவுண்டுகளை விட (2,495 கோடி) கணிசமான குறைவான தொகை ஆகும்.