ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் தொடரின் 30வது போட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கிடையில் சின்னசாமி மைதானத்தில் நேற்று(16) நடந்தது.
நாணயசுழற்சியில் வெற்றிப் பெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதற்கமைய முதல் இன்னிங்சை ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 287 ஓட்டங்கள் அடித்தது.
டிராவிஸ் ஹெட் 102 ஓட்டங்களும், கிளாசன் 67 ஓட்டங்களும் விளாசினர். இந்த இன்னிங்சில் 22 சிக்ஸர்கள், 19 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.
பின்னர் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 262 ஓட்டங்கள் குவித்து தோல்வியுற்றது.
அதிக சிக்ஸ்சர்கள் – தினேஷ் கார்த்திக் 83 ஓட்டங்களும், டு பிளெஸ்ஸிஸ் 62 ஓட்டங்களும் விளாச மொத்தம் 16 சிக்ஸர்கள், 24 பவுண்டரிகளை பெங்களூரு அணி விளாசியது.
இதன்மூலம் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர், பவுண்டரிகள் (மொத்தம் 81 பவுண்டரிகள்) விளாசப்பட்ட போட்டியாக ஐ.பி.எல் வரலாற்றில் இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.