Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் மட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உடற்பயிற்சி நிலையங்கள்!

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் மட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உடற்பயிற்சி நிலையங்கள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் தொற்றா நோயில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு 30 இலட்சம் ரூபாய் செலவில் உலக வங்கியின் நிதியுதவியின் கிழ் புதிய உடற்பயிற்சி நிலையம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவை பிரிவினால், பொதுமக்களை தொற்றா நோயில் இருந்து காப்பாற்றும் பொருட்டு கிழக்கு மாகாணத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடுவோம், வாழ்க்கையின் ஆரோக்கியத்தை பேணுவோம் என்னும் விசேட செயல் திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளிலும் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் உடற்பயிற்சி நிலையங்கள் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

தினமும் 30 நிமிட உடற்பயிற்சி ஆரோக்கியத்தின் வளர்ச்சி எனும் கூற்றை பொதுமக்களிடம் வலுப்படுத்தும் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட செயலக ஊடாக உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் இந்த செயல்திட்டம் பிராந்திய சுகாதார சேவை அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு கோட்டை பூங்கா வளாகத்தில் திறந்த வெளி உடற்பயிற்சி நிலைய திறப்பு விழா நிகழ்வு, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று (17) காலை இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எந்திரி என் சிவலிங்கம் கலந்துகொண்டு இதனைத் திறந்து வைத்தார்.

அதேசமயம் இலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களில் 85 வீதமானவை தொற்றா நோய்களின் காரணமாக இடம்பெறுவதால் சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவை பிரிவினால் பொதுமக்களை தொற்றா நோயில் இருந்து காப்பாற்றும் பொருட்டு விசேட இந்த செயல்திட்டம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது

அதேசமயம் குறித்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் தொற்றா நோயில் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ் உதயகுமார், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் நவலோஜிதன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை அலுவலக முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், மாநகர சபையின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் படிக்க வந்த வீட்டில் கைவரிசை காட்டிய யுவதி கைது
செய்திகள்

மட்டக்களப்பில் படிக்க வந்த வீட்டில் கைவரிசை காட்டிய யுவதி கைது

August 6, 2026
அம்பாறையில் ‘மது’ என அழைக்கப்படும் பெண் போதைப்பொருள் வியாபாரி கைது
செய்திகள்

அம்பாறையில் ‘மது’ என அழைக்கப்படும் பெண் போதைப்பொருள் வியாபாரி கைது

August 6, 2026
பசில் ராஜபக்‌ஷ மிக்ச்சிறந்த திறமைசாலி; சித்தப்பாவை கண்டு நாமல் பெருமிதம்
செய்திகள்

பசில் ராஜபக்‌ஷ மிக்ச்சிறந்த திறமைசாலி; சித்தப்பாவை கண்டு நாமல் பெருமிதம்

August 6, 2026
பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!
செய்திகள்

பெரிய வெங்காயத் தேவையில் 90% இறக்குமதியை சார்ந்துள்ளது இலங்கை; அமைச்சர் வசந்த சமரசிங்க!

August 6, 2026
கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
செய்திகள்

கல்முனையில் குவியும் குப்பைகள்; உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

August 6, 2026
பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
செய்திகள்

பரீட்சைக் கால இடர்களை அறிவிக்க 5 புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

August 6, 2026
Next Post
கரை ஒதுங்கிய படகில் சிதைவடைந்த மனித உடல்கள்; அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள பிரேசில் சம்பவம்!

கரை ஒதுங்கிய படகில் சிதைவடைந்த மனித உடல்கள்; அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள பிரேசில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு