ஈஸ்டர் தாக்குதல் சதி குறித்த புதிய பல தகவல்களை ஆதாரங்களுடன் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த
சிறில் காமினி பெர்னாண்டோ அவர்கள் CID யிடம் முன்வைத்து இருக்கின்றார் .
தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த ஒருவரின் Internet Protocol (IP) address கண்டுபிடிக்கப்பட்ட போதும் அந்த நபரை கைது செய்ய இராணுவ புலனாய்வு பிரிவு பணிப்பாளர் Brigadier Chula Kodithuwakku அனுமதி மறுத்தது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என சொல்லி இருக்கின்றார்.
குறிப்பாக மேற்படி (IP) address பிள்ளையான் சகிதம் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கிற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த பிள்ளையானின் கூட்டாளியான கலீல் என்கிற புலனாய்வு அதிகாரியின் மகனின் பாவனையிலிருந்து தெளிவாக அடையாளம் காணப்பட்ட போதும் Brigadier Chula Kodithuwakku தலையீடுகளால்அவன் கைது செய்யப்படவில்லை என்பதை அம்பலப்படுத்தி இருக்கின்றார்.
குறிப்பிட்ட காலத்தில் கலீல் மகன் Brigadier Chula Kodithuwakku யின் கீழ் புலனாய்வு பிரிவு பணியாற்றி கொண்டு இருந்ததையும் வெளிப்படுத்தி உள்ளார்.
அதே போன்று தெஹிவளையில் உயிரிழந்த Jameel Mohamed என்கிற குண்டுதாரி அதற்கு முன் Taj Samudra hotel இல் வெடிக்கத் தயாராகவிருந்த நிலையில் அவனை தொலை பேசிமூலம் அங்கிருந்து வெளியேற்றிய கேணல் அன்சார் என்கிற புலனாய்வு அதிகாரியை அம்பலபடுத்தி விசாரிக்க கோரிக்கை முன்வைத்துள்ளார்.
வவுணதீவு நகரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சஹ்ரான் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தவறான அறிக்கைகளை கேணல் கெலும் மத்துமகே என்கிற புலனாய்வு அதிகாரி யாரின் நலன்களுக்காக முன்வைத்தார் என அவரை அம்பலபடுத்தி விசாரிக்க கோரியுள்ளார்.
இந்த சம்பவத்தில் விசாரணைகளை தவறாக வழிநடத்த புலனாய்வு பிரிவுகள் DMI, SIS முயற்சித்தது குறித்த பல ஆதாரங்களை முன் வைத்து அது தொடர்பாகவும் கேள்வி எழுப்பி இருக்கின்றார்.
அதே போல Taj Samudra hotel குண்டுதாரியான Jameel , Hotel ஐ விட்டு வெளியேறி தனது வீட்டிற்கும் தனது தாய் வீட்டிற்கும் சென்ற போது கலீல் மகன் உட்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று அவன் வீட்டுக்குச்சென்று Jameel பற்றிய தகவல்களை கேட்டறிந்தது மட்டுமல்லாமல், அவர்களை அங்கு அனுப்பிய அதிகாரி குறித்தும் விசாரிக்கப்படவில்லை என்பதையும் அம்பலபடுத்தி இருக்கின்றார்.
குறிப்பாக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பிள்ளையான் குழுவின் ஆசாத் மௌலானாக்குவுக்கு Taj Samudra hotel க்கு சென்று Jameel அழைத்து வர உத்தரவு பிறப்பித்தது தொடர்பாக விசாரிக்கப்படவில்லை என்பதை கோடுகாட்டி விசாரிக்க சொல்லி இருக்கின்றார்.
ஆசாத் மௌலானாவின் வாக்குமூலத்தின் படி சுரேஷ்சாலேக்கும் சஹாரானுக்கும் இடையிலான புத்தளத்தில் நடந்தாக சொல்லப்படும் சந்திப்பு தொடர்பாக விசாரிக்கப்படவில்லை என்பதையும் அம்பலபடுத்தி உள்ளார், சஹாரான் மனைவி Hadiya தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்ட மிக முக்கிய புள்ளியாக அடையாளம் Abu Hind யிடம் எதுவித விசாரணைகளும் நடத்தப்படவில்லை என்பதையும் சொல்லி உள்ளார்.
மேற்படி பரபரப்புக்கு மத்தியில் உண்மையில் இன்றுடன் ஈஸ்டர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபர் ஈஸ்டர் 21 தாக்குதல் ஒரு சதி என்பதை உறுதி செய்கின்றார்.
குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ரவி செனவிரத்ன,ஷானி அபேசேகர நிசாந்த சில்வா ஆகியோர் மேற்படி சதியில் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவிற்கு தொடர்பு இருந்ததாக சொல்லுகின்றார்கள்
விசேடமாக பிள்ளையான் குழுவும் சஹ்ரான குழுவினரும் இராணுவ புலனாய்வு பிரிவில் இருந்ததாக உறுதி செய்கின்றார்கள்.
இவர்களை சுரேஷ் சாலே வழிநடாத்தியதாக தெளிவுபடுத்துகின்றார்கள்.இப்போதுசிறில் காமினி பெர்னாண்டோ 8 புதிய தகவல்களை பல ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளார்.
ஆனால் இலங்கையின் குற்றவியல் சட்டக் கட்டமைப்புக்கு மேற்படி தாக்குதல்களுக்குக் காரணமான சூத்திர தாரிகளை இதுவரை விசாரிக்க கூட முடியவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் பெற்று கொடுக்க முடியவில்லை.
அதேசமயம் ஏற்கனவே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இது குறித்து குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலும், அது குறித்த விசாரணைகள் தொடர்பிலும் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று குற்றம்சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.