கனடாவில் (canada) நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் ( FIDE tournament) இந்தியா (india) – தமிழ்நாட்டைச் (tamil nadu) சேர்ந்த 17 வயதான கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (D Gukesh) வெற்றி பெற்றுள்ளார்.
இவர் விஸ்வநாதன் ஆனந்துக்குப் (Viswanathan Anandu) பின் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ( World Championship final) தகுதி பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அத்துடன் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் குகேஷ் அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர்.
இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் பெற்றார்.
இதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார்.
இவருக்கு செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இந்திய பிரதமர் ஸ்டாலின் என முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.