வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதைத் தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையைக் கட்டாயமாக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகின்றமையை கருத்திற்கொண்டு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
மேலும், கன்று பிறந்து 18 மாதங்களுக்குள் காது அடையாள வில்லைகளை (Ear Tag) பொருத்திக் கொள்வதைக் கட்டாயமாக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாத கால்நடை வளர்ப்பார்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.