மணமேடையில் இருந்து மணமகளை மிளகாய் பொடி தூவி குடும்பத்தினர் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திருமணம் என்றாலே இரு வீட்டாருக்கும் பரபரப்பான நிலை தான் இருக்கும். திருமணத்திற்கு வருபவர்களை பார்த்துக் கொள்வதில் இருந்து திருமண ஏற்பாடுகள் வரை பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், ஆந்திராவில் பெற்றோரே மணப்பெண் மீது மிளகாய் பொடி தூவி கடத்த முயன்றுள்ளனர்
இந்திய மாநிலமான ஆந்திரா, கடையம் பகுதியை சேர்ந்தவர்கள் சினேகா மற்றும் பட்டின வெங்கடானந்த். இவர்கள், இருவரும் ஒன்றாக கல்லூரியில் படித்து வந்திருக்கின்றனர். அப்போது இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
பின்னர், மணமகன் வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 21 -ம் திகதி நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மணமகள் வீட்டாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அப்போது மணமகளின் குடும்பத்தினரும், உறவினர்களும் வந்து கலந்து கொண்டனர். அங்கு, மேடையில் மணமகனுடன் இருந்த மணமகளை பார்த்த அவரது தாயும் சகோதரரும் சேர்ந்து இழுத்துச் சென்றனர்.
அதனை தடுத்த மணமகனின் வீட்டார் மீது மிளகாய் பொடியைத் தூவியிருக்கின்றனர். இதில், மணமகளை மணமகன் வீட்டார் சேர்ந்து மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.