சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் ஐந்து நாட்களாக யால வனப்பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர் .
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வேட்டையாடுபவர்களை கைது செய்வதற்காகவே யால வனப்பகுதயில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர் .
இந்த சுற்றிவளைப்பின் போது யால வனப்பகுதியில் இரகசியமாக பயிரிடப்பட்டிருந்த ஆறு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அழித்துள்ளதுடன் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி , உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் 2 மற்றும் 30,450 கிலோ உலர் கஞ்சா ஆகியவையும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சுற்றிவளைப்பில் யால வனப்பகுதியில் பதுங்கியிருந்த 3 சந்தேக நபர்களையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதுடன், சந்தேகநபர்கள் விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படைத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.