Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யுத்தத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு போக்குவரத்து சேவை; அமைச்சர் சந்திரகாந்தனுக்கு குவியும் நன்றிகள்!

யுத்தத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு போக்குவரத்து சேவை; அமைச்சர் சந்திரகாந்தனுக்கு குவியும் நன்றிகள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் குருமண்வெளி துறையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையில் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – படுவாங்கரைப் பகுதிக்கும் எழுவாங்கரைப் பகுதிக்குமான பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாக குருமண்வெளி – மண்டூர் படகுப் பாதை இடம்பெற்று வருகின்றது.

இப்படகு பாதையில் பயணம் செய்யும் பயணிகள் மட்டக்களப்புக்குச் செல்வதாயின் நிறைய சிரமத்தின் மத்தியில் அதிக செலவு செய்து தமது போக்குவரத்துக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவ்விடயம் குறித்து அப்பகுதி மக்கள் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் (Pillayan) முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க குருமண்வெளி துறையிலிருந்து குறித்த பேருந்து சேவை மகிழூர், எருவில், கிராமங்களுடாக மட்டக்களப்பு வைத்தியசாலை வரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்து போக்குவரத்து சேவையின் ஆரம்ப நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் இணைந்திருந்தனர்.

யுத்தகாலத்தின் போது குறித்த போருந்து சேவை இடம்பெற்று வந்தபோதிலும் பின்னர் அது நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால், அப்பகுதி மக்களும், குருமண்வெளி – மண்டூர் படகுப் பாதையைப் பயன்படுதிவரும் பயணிகளும், விவசாயிகளும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது இப்போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப் பட்டுள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதோடு இச்சேவையை ஏற்படுத்தியுள்ள இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் அவர்களுக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

September 23, 2026
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
Next Post
ஈராக்கை பூர்வீகமாக் கொண்டவர்கள் யூதர்கள்; வெளியாகும் உண்மைகள்!

ஈராக்கை பூர்வீகமாக் கொண்டவர்கள் யூதர்கள்; வெளியாகும் உண்மைகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு