கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.