அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களும் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவிக்கையில்,
கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீதமான சம்பளக் குறைப்பு தொடர்பில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு கூடி கலந்துரையாடலை நடத்தியிருந்தது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/04/image-1032-1024x384.png)
இந்நிலையில், எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சம்பளப் பிரச்சினையை நிவர்த்தி செய்யுமாறு கோரி கடந்த காலங்களில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
எனினும், அதற்கான தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மீண்டும் போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.