கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் யாசகம் பெறுவோர் ஒரு நாளைக்கு 15,000 முதல் ரூ. 20,000 வரை சம்பாதிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு 2500 முதல் 3000 வரை சம்பாதிக்க முடியுமான வேறு தொழில்கள் உள்ளது எனவும், அந்த தொழில்களை பெற்றுத்தருவதற்கான வழிவகைகளை செய்து தருவதாக கூறியும் குறித்த யாசகம் பெறுவோர் ,ஒரு நாளைக்கு பிச்சை எடுப்பதன் மூலம் ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை சம்பாதிப்பதாக கூறி குறித்த தொழில்களை மறுத்து விட்டதாக போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் தகவல் தெரிவித்துள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-3.png)
கடந்த வாரத்தில் 94 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அவர்களை நீண்ட நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க முடியாததால் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
பிச்சை எடுப்பதை முழுநேர தொழிலாக பலர் செய்து வருவதாகவும், அவர்களில் பெரும்பாலான பிச்சைக்காரர்கள் போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையாகியுள்ளார்கள். அவ்வாறான நபர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார் .