இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒரு நிரபராதியை குற்றவாளி என்று தவறாகக் கருதி அவரைத் தாக்கி கைது செய்த இலண்டன் பெருநகர பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனையளித்துள்ளது
இந்த சம்பவத்தில் அவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு அவருக்கு 12 வார பணி இடைநீக்க தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2022 இல் கிழக்கு லண்டனில் உள்ள ரோம்ஃபோர்டில் இருந்து ஒருவர் பொலிஸாருக்கு அழைப்பை ஏற்படுத்தினார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-14.png)
ஒருவர் தமக்கு மிரட்டல் விடுத்து ஒரு கடையை சேதப்படுத்தியதாக அவர் முறையிட்டுள்ளார்.
எனினும் குற்றவாளியை கைது செய்யாத ஜொனாதன் மார்ஸ் என்ற இந்த பொலிஸ் அதிகாரி ரசிக அத்தநாயக்க என்ற இலங்கையரை கைது செய்துள்ளார்.
அத்துடன் அவர் அத்தநாயக்கவை தரையில் இழுத்து சென்று தலையின் பின்புறத்தில் தாக்கியதும் காணொளி ஒன்றில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.