மதுப்பிரியர்கள் சிலர் தங்களுக்கு புதிய மதுக்கடை தேவை என்றும், தொடர்ந்து கசிப்பை (நாட்டு சாராயம்) குடிப்பதால் நோய்வாய்ப்படுவதாகவும், எனவே நல்ல மதுபானம் அருந்த வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கோஷமிட்டமை கண்டி திகன பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கண்டி திகன பகுதியில் புதிய மதுபானசாலை திறப்பு விழாவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதலால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-18.png)
ஊருக்கு ஒரு மதுக்கடை போதும், இன்னொன்று தேவையற்றது என்று ஒரு பிரிவினர் இந்த திறப்பு விழாவில் கோஷமிட்டனர்.
ஆனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அந்த இடத்திற்கு வந்த மற்றொரு குழுவினர், தங்களுக்கு புதிய மதுக்கடை வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இதனால் இந்த புதிய மதுக்கடை அத்தியாவசியமானது என்றும் தெரிவித்தனர்.