அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த சுமார் 200 கூடாரங்களை காவல்துறையினர் நேற்றுமுன்தினம் (01) புதன்கிழமை அதிகாலை அகற்றத் தொடங்கினர்.
தலைநகரின் மையத்தில் உள்ள மவுண்ட் ஸ்ட்ரீட்டில் உள்ள கூடாரங்களில் இருந்து புலம்பெயர்ந்தோரை காவல்துறையும் மற்ற அதிகாரிகளும் அகற்றி தங்குமிடங்களுக்கு நகர்த்தி வருவதாக அரசாங்கம் கூறியது.
மக்களை அழைத்துச் செல்ல பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
முகாம் அகற்றப்பட்டவுடன் மக்கள் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரதமர் சைமன் ஹரிஷத் தெரிவித்தார்.