இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் முற்படுத்த வேண்டும், இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளையும் உறுதிப்படுத்த சர்வசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பவை
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய பிரேரணையை அமெரிக்க செனட் உறுப்பினர்கள் 5 பேர், இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
வரலாற்று ரீதியாக அடக்கப்பட்டுள்ள இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தின் அரசியல் உரிமைகளையும் பிரதிநிதித்துவத்தையும் நியாயப்படுத்துமாறும், இனப்பிரச்சினைக்கு வித்திடக்காரணமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் பொருட்டும், நிரந்தரமான அசியல் தீர்வுக்காக பணியாற்றுமாறும் சர்வதேச சமூகத்தை வலியுறுத்துகிறது.
இலங்கையில் உள்ள சகல இன மக்களின் ஜனநாயக சமத்துவத்தை உறுதி செய்ய பொதுசன வாக்கெடுப்பு உள்ளிட்ட, உலகள வில் ஏற்றுக்காள்ளப்பட்ட ஜனநாயக கோட்பாடுகளை இலங்கையில் நடத்த ஊக்குவிக்க
வேண்டுமென்றும் பிரேரணை வலியுறுத்தியுள்ளது.