தான் பயன்படுத்தும் வாகனம் 15 வருடங்களுக்கு மேல் பழைமையானது என்பதால் அதனை சீர்செய்ய நிறுவனமொன்று 2 கோடி ரூபாவினை அறவிடுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகனங்களை வழங்குவதே பொருத்தமானது எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவது தொடர்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குறிப்பிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், தனது வாகனத்தை பழுது பார்ப்பதை விட புதிய வாகனம் ஒன்றை பெற்றுக்கொள்வதே சிறந்ததென கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு வாகனத்தையும் பத்து வருடங்களுக்கு மேல் பயன்படுத்த முடியாது எனவும் மஹிந்த யாப்பா அபேரத்ன கூறியுள்ளார்.
இதன் காரணமாக தற்போது தனியார் வாகனம் மற்றும் பழைய வாகனத்தையே பயணத்திற்கு பயன்படுத்துவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.