நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் நாளையும் (05) நாளை மறுதினமும் (06) இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடளாவிய ரீதியில் சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.