அமெரிக்காவில் பிறந்த குழந்தையை உயிரோடு பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசிய பெண், நான்கு ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தையின் அழு குரல் கேட்டதாக, இரண்டு சிறுமிகள் சத்தம் கேட்ட இடத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு ஒரு குழந்தை பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.உடனே பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், அங்கு சென்ற பொலிஸார் குழந்தையை பிளாஸ்டிக் பையிலிருந்து மீட்டு முதலுதவி அளித்தனர்.
பின்னர் இந்தியா என பெயரிடப்பிட்ட அந்த குழந்தையின் மரபணு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க, அவர்கள் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தையின் மரபணு, இந்தியாவிலுள்ள ஒரு நபருக்கு ஒத்துப் போகியுள்ளது. பின்னர் அதனை வைத்து அவரை விசாரிக்கையில், அந்த குழந்தை கரிமா ஜிவானி(40) என பெண்ணுடையது என தெரிய வந்துள்ளது.