ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புடின் ஐந்தாவது முறையாக பதவியேற்றுள்ளார். இவரது பதவிக்காலம் 6 ஆண்டுகள் என தெரிவிக்கப்படுகிறது.
புதிய பதவிக்காலத்தின் தொடக்கத்தில், ரஷ்ய அரசாங்கம் வழக்கமாக கலைக்கப்படுகிறது, இதனால் புடின் ஒரு புதிய பிரதம மந்திரி மற்றும் அமைச்சரவையை பெயரிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் 88 சதவீத வாக்குகள் பெற்று 5வது முறையாக புதின் மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியானார்.
இதன் மூலம் அதிக முறை ரஷ்ய அதிபராக இருந்தவர் என்ற சாதனையையும் அவர் புடின் படைத்துள்ளார்.
விளாடிமிர் புதின் 2000 ஆம் ஆண்டு முதன்முதலாக ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.