Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள 10 அம்ச கோரிக்கை

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள 10 அம்ச கோரிக்கை

2 years ago
in செய்திகள்
  1. ஜனாதிபதி மற்றும் பிரதமர் அரசாங்கத்தின் முதற் செயல்பாடாக நாட்டின் ஜனரஞ்சக கட்டமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் சட்டத்தை மதிக்கும் திறமையான பொதுநிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். விசேடமாக இலங்கையில் 14 பேருக்கு ஒரு அரச ஊழியர் என்ற விகிதம் மாற்றயமைக்கப்பட வேண்டும்.
  2. நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆகியவற்றை தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்.
  3. புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிய அரசியலமைப்பு தொடர்பில் எட்டாவது பாராளுமன்றம் சிறப்பான பணியை செய்துள்ளது. லால் விஜேநாயக்க மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவராக இருந்ததோடு மட்டுமன்றி அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்தவராகவும் உள்ளார். அந்த வகையில் தற்போதைய தருணத்தில் அந்தச் செயற்பாட்டில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே முடிக்க வேணடியுள்ளதால் அந்த விடயத்திலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
  4. தேசிய இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். தேசியப் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே இந்த சிறந்த சந்தர்ப்பத்தை நழுவவிடாது எதிர்கால சந்ததியினரை கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
  5. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும்; என்பதோடு அதற்குத் தேவையான சட்டங்களை இயற்றுதல் முக்கியமானதாகின்றது.
  6. அடுத்துவரும் காலத்தில் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் தேர்தல் முறைமைகள் மற்றும் விதிமுறைகளை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் பிரியசாத் டெப் கமிஷன் தலைமையிலான தேர்தல் சட்ட திருத்தத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை வெளிப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது.
  7. பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள துறைசார் மேற்பார்வைக் குழுக்களை வலுவாகச் செயற்படுத்தப்படும்.
  8. அனைத்து சமூகத்தால் வெறுப்படைந்த கட்சி தாவுகின்ற செயற்பாடுகளைத் தடுப்பதற்குத் தேவையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
  9. நிறைவேற்று ஜனாதிபதி பதவியை இரத்து செய்தல். இந்த விடயத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தின் போது ஜனாதிபதியாகிய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இறுதிக்கட்டமாக அமையும் என்று பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொள்கை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். நிறைவேற்று அதிகாரத்தை திடீரென ஒழிக்க முடியாவிட்டாலும் அரசாங்கத்தின் இருப்பை ஒருகுறித்த திகதியை சாதாரண பொதுமக்களுக்கு வாக்குறுதியை வழங்கினால் அது அரசாங்கத்தின் கௌரவத்திற்கும் ஜனாதிபதியின் நற்பெயருக்கும் மேலும் வழிவகுக்கும்.
  10. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம். சம்பந்தமான கோவை 25 ஆண்டுகளுக்குப் பிறகு 8ஆவது பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டு முறைமை தயாரிக்க முடிந்தது. பிமல் ரத்நாயக்க மிகவும் பெறுமதியான பணியை செய்தார். அதன் அடிப்படையில் ஒழுக்கக் கோவையின் சிலவிதிகளை உள்வாங்க முடியும். இல்லையேல் அவற்றை முழுமையாக அமுலாக்க முடியும்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
Next Post
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.