வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கு இளைஞர்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தல் தொடர்பான செயற்திட்டத்தின் செயலமர்வு மாவட்டத்தில் பரவலாக செயற்பட்டுவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான லிப்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வருகின்றது.
இரண்டாம் கட்டத் திட்டத்தின் முதலாவது செயலமர்வு மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் கடந்த இரு நாட்களாக (07 – 08) இடம்பெற்றது.
தலா 30 உயர் தேசிய டிப்ளோம கற்கை நெறியைத் தொடரும் தலா முப்பது மாணவர்கள் வீதம் 60 மாணவர்களுக்கு இரண்டு குழுக்களாக இப்பயிற்சிச் செயலமர்வு நடைபெற்றது.
இதன் போது கருத்துச் சுதந்திரம், ஊடகம், ஊடக தர்மம், சமூக ஊடகங்கள் மற்றும் அவற்றில் ஏற்படும் குற்றச்செயல்கள், ஊடக சட்டங்களும் தண்டனைகளும் போன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகத் துறையில் பயிற்றுவிக்கப்பட்ட வளவாளர்களால் தெளிவு படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.