பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்றுமுன்தினம் (9) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பாதாள உலக குழுக்களுடன் தொடர்புகளை பேணியதாக கூறப்படும் மேலும் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பேலியகொடை மற்றும் கொட்டுமுல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30,36 மற்றும் 33 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்பு 12,கொழும்பு 15 மற்றும் அங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 42,44,42,24 மற்றும் 49 வயதுடைய ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக குற்றக் குழுக்களைச் சேர்ந்த 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.