ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது மேற்கொண்டுள்ள வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் மேலும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி அண்மையில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதற்கமைய, வட மாகாண ஆளுநராக பி.எஸ்.எம் சாள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், தற்போது, ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பியதன் பின்னர், மேலும் இரண்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.