வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுக்க இளைஞர்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தல் தொடர்பாக “லிப்ற்” நிறுவனத்தினால் தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையில் பயிலும் மாணவர்களுக்காக நடாத்திய இரு நாள் செயலமர்வு மட்டக்களப்பு ஏறாவூர் பயிலுனர் மையத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (14) மற்றும் நேற்று புதன்கிழமையுமாக (15) இரண்டு நாட்கள் இடம்பெற்றது.
மாவட்ட செயலகத்துடன் இணைந்து மாவட்டத்தில் இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான “லிப்ற்” நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்ற செயற்றிட்டங்களில் ஒன்றாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் இளைஞர், யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுத்தல் தொடர்பான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
“எல்பிடாஸ்” நிறுவனத்தின் நிதியுதவியில் லிப்ற் நிறுவனத்தின் அனுசரணையில் நிறுவனப் பணிப்பாளர் ஜானு முரளிதரனின் தலைமையில் இச்செயலமர்வு நடைபெற்றது.
இச்செயலமர்வானது லிப்ற் நிறுவனத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட பயிற்சியாளர்களான சிரேஸ்ட ஊடகவியலாளர் உ.உதயகாந்த், ஊடகவியலாளர் எம்.எஸ்.சஜித் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டுள்ளனர்.
இச் செயலமர்வின் இறுதி நாளான நேற்று புதன்கிழமை (15) திகதி ஏறாவூர் பயிலுனர் மையத்தின் அதிகாரிகள், “லிப்ற்” நிறுவனத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.