கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை நாவலடி பகுதியில் வைத்து திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர் .
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-641-461x1024.png)
கொழும்பில் பொருட்களை ஏற்றிக்கொண்டு காத்தான்குடியை நோக்கி சென்ற லொறியே இவ்வாறு தீ பற்றியுள்ளது. இதனால் லொறியில் எடுத்துச் சென்ற பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-640-461x1024.png)