கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை,அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மக்கள் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வினை நடாத்துவதற்கு பொலிசார் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகவும், அவர்களது இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மட்டக்களப்பு சிவில் அமைப்பு செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமார் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் வாழைச்சேனை கிழக்கு ஊடக மன்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிகையில்,
திருகோமலை சம்பூர், அம்பாறை, துறை நீலாவனை,மட்டக்களப்பு ஆகிய இடங்களை போன்றே, 5 ஆவது நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு கதிரவெளி மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதும் வாகரை பொலிசாரினால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
வலி சுமந்த பயணத்தில் எங்களால் ஒரு கஞ்சைக் கூட வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.மக்கள் தங்களது சமய வழிபாட்டுடன் அச்சமின்றி தங்களது காரியங்களை செயற்படுத்த அரசு வழிவகுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்