Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு!

மட்டு பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பொலிஸாரின் அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் ஐந்தாவது நாளாகவும் மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12ஆம் திகதி தொடக்கம் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகின்றன.

பொலிஸார் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி கஞ்சி பரிமாறுவதை தடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுத்தபோதிலும் தொடர்ந்தும் கஞ்சி பரிமாறும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் (17) மட்டக்களப்பின் நுழைவாயிலான பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து இந் நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தனர்.

இதன்போது கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பத்திகாரி தலைமையிலான பெருமளவான பொலிஸார் குறித்த இடத்தில் குவிக்கப்பட்டிருந்ததுடன், கஞ்சி குடிப்பதற்காக வாகனங்களை நிறுத்தியவர்கள் அங்கிருந்து செல்லுமாறு பொலிஸாரினால் அச்சுறுத்தப்பட்டனர்.

பொலிஸாரின் செயற்பாட்டினை கண்டிக்கும் வகையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பொலிஸாருடன் முரண்பட்டதை காணமுடிந்தது.

இந்த நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான அருட்தந்தை க.ஜெகதாஸ், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து, தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி ஆர்.ஜெயபிரகாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது வீதியின் இரு மருங்கிலும் பொலிஸார் நிறுத்தப்பட்டு வாகனங்களில் வருவோர் கஞ்சி பருகுவதை தடுக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதும் கஞ்சி பரிமாறும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதனை மக்களும் வந்து பெற்றுச்செல்வதை காணமுடிந்தது.

தொடர்புடையசெய்திகள்

கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்
செய்திகள்

கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்

August 11, 2026
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!
செய்திகள்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

August 11, 2026
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?

August 11, 2026
மருதநகர் மெதடிஸ்த திருச்சபையின் 16ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது!
செய்திகள்

மருதநகர் மெதடிஸ்த திருச்சபையின் 16ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது!

August 11, 2026
வடக்கு – கிழக்கின் பிராந்திய அபிவிருத்திக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு
செய்திகள்

வடக்கு – கிழக்கின் பிராந்திய அபிவிருத்திக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு

August 11, 2026
பௌத்த மதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினால் அரசாங்கம் வீடு செல்லநேரிடும்; சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை
செய்திகள்

பௌத்த மதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினால் அரசாங்கம் வீடு செல்லநேரிடும்; சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை

August 11, 2026
Next Post
நாட்டிலுள்ள மாணவர்களுக்கு மீண்டும் காப்புறுதி திட்டம்!

நாட்டிலுள்ள மாணவர்களுக்கு மீண்டும் காப்புறுதி திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு