Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!

44 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலக சுற்றுலா தின விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தில் முக்கியமான ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) காலை வெள்ளோட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் கலந்து கொண்டார். 

மேலும் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,மன்னார் நகர பிரதேசச் செயலாளர் காந்தீபன் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டதோடு,பொலிஸார் மற்றும் கடற்படையினரும் கலந்து கொண்டிருந்தனர். 

மன்னாரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தலைமன்னார் கடற்கரையிலிருந்து 3 வது மணல் திட்டை நோக்கி குறித்த வெள்ளோட்ட ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. 

காலை 9 மணியளவில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து விசேட படகுகள் மூலம் 3வது மணல் திட்டை நோக்கி பயணம் இடம் பெற்றது. 

இரண்டாவது மணல் திட்டில் கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் களைப்பாறுவதற்கும், அதில் அவர்கள் தங்களுடைய செயல்பாடுகளைச் செய்வதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மூன்றாவது மணல் திட்டு, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும், சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்ற போது அவர்களை இங்கு அழைத்து வந்து, இந்த இடத்தில் ஆய்வுகளைச் செய்துவிட்டு, அவர்கள் திரும்பிச் செல்லக்கூடிய ஒரு நடை முறை முன்னெடுக்கப்பட்டது. 

வட மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்து தலைமன்னாரில் இருந்து விசேட படகுகள் மூலம் கட்டணம் செலுத்தி மூன்றாவது மணல் காட்டிற்குச் சென்று பார்வையிடுவதற்கான வசதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

குறித்த நடவடிக்கைகள் மூலம் தலைமன்னாரில் இருக்கின்ற சுய தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு, தங்களுடைய வருமானத்தைப் பெருக்க கூடிய வகையில் தொழில் வாய்ப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!
உலக செய்திகள்

“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!

September 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

September 25, 2026
நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்
செய்திகள்

நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்

September 25, 2026
இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
செய்திகள்

இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை

September 25, 2026
அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செய்திகள்

அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

September 25, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு