வாழைச்சேனை கும்புறுமூலையில் நாய்கள் பராமரிப்பு நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று பிரதேசத்தில் கவனிப்பாரற்று பொது இடங்களில் காணப்படும் நாய்களை பராமரிப்பதற்கென்று இந்த பராமரிப்பு நிலையம் ஆளுநரின் ஆலோசனையுடன் கிழக்கில் முதல் நிலையமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்களிலும் இவ்வாறான காப்பகங்களை திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை தெரு நாய்களின் தொல்லையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆ ளுநர் தமது உரையின் போது தெரிவித்துள்ளார்.
பராமரிப்பு நிலையத்தில் நோயுள்ள நாய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்துதல், காயங்களுக்கு மருந்து கட்டுதல், கருத்தடை போன்ற மருத்துவ சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.