இன்று ( 18 ) முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வானது தமிழர் தாயகமுட்பட பல்வேறு இடங்களில் இடம் பெற்றிருந்தது.
அதனடிப்படையில் கிழக்குப் பல்கலைகழக மாணவர்களினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கஞ்சி வழங்கல் நிகழ்வினை குழப்பும் முகமாக குறித்த இடத்துக்கு வந்த ஏறாவூர் பொலிஸார், மாணவர்களுடன் முரண்பட்டதுமட்டுமல்லாமல் கஞ்சிப் பானையை அணைத்தனர்.
அதன் பின் கஞ்சி பானை மற்றும் அங்கு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், அங்கிருந்த பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான மேசை என்பனவற்றை பொலிஸார் அங்கிருந்து எடுத்துச்சென்றனர்.
இந்த சம்பவத்தினால் குறித்த மாணவர்கள் அச்சத்துடன் காணப்பட்டதுடன், பொலிஸாரின் இந்த அடாவடித்தனம் முகப்புத்தகங்கள் மூலமாக பரவி வருகின்றது.