இலங்கை பாராளுமன்றம் அடுத்த மாதம் 14ஆம் திகதி கலைக்கப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் ரஷ்ய முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த காலக்கெடுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக வீரதுங்க தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி இரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம் எனவும், இது உடனடி பாராளுமன்ற தேர்தலுக்கு வழி வகுக்கும் எனவும் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படவில்லை எனவும் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.