இலங்கையில் பொலிசாரின் செயற்பாடுகளினால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளதுடன், சில நாட்களுக்கு முன்பு நாட்டில் யாரும் அறிந்திராத போக்குவரத்து சட்டம் ஓன்று தொடர்பில் அபராதம் வழங்கப்படும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கண்டியில் பதிவு செய்யப்பட்ட வேறு ஒருவரின் வாகனம் ஒன்றை பயணத்திற்காக உறவினர் ஒருவர் பெற்றுக்கொண்டு மாகாணம் விட்டு மாகாணம் சென்றுள்ளார்.
இவ்வாறு சென்று கொண்டிருந்தவரை வழி மரித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர், சாரதியிடம் வாகனத்திற்கான உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் என்பவற்றை சரிபார்த்து விட்டு அபராதம் எழுத சென்றுள்ளார்.
ஒன்று புரியாத சாரதி எதற்க்காக அபராதம் எழுத போகிறீர்கள் என்று வினவ,
உங்களுடைய ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் பெயர் வேறு, வாகன அனுமதி பத்திரத்தில் இருக்கும் உரிமையாளரின் பெயர் வேறு. வாகனத்தின் உரிமையாளர் இல்லாமல் ஏனையவர் வாகனத்தை எடுத்துக்கொண்டு மாகாணம் விட்டு மாகாணம் செல்ல முடியாது, அப்படி செல்ல வேண்டும் என்றால் வாகனத்தின் பதிவு ஆவணம் கொண்டு செல்லல் வேண்டும். உங்களுக்கு இது தெரியாதா என்று கேட்டுள்ளார்.
இதற்கு முதல் இப்படி ஒரு சட்டத்தை இலங்கையில் கேள்விப்படாத சாரதி குழம்பிய வண்ணம், கடைசில் இப்பொழுது எதற்காக எனக்கு அபராதம் எழுதுகிறீர்கள் என்று கேட்க வாகனத்தின் பதிவு ஆவணம் கொண்டு செல்லாமல் மாகாணம் விட்டு மாகாணம் சென்றதற்காக என்று பதில் கூறியுள்ளார்.
அதேசமயம் இதை யாருக்கும் தெரியாமல் காணொளி எடுத்து முகப்புத்தகத்தில் பாதிக்கப்பட்ட சாரதி
பதிவிட்டுள்ளதுடன், இலங்கையில் இல்லாத ஒரு சட்டத்தை பணத்திற்காக பொலிஸாரே உருவாக்கி பணம் பறித்து வருவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.