வரி உயர்வை தொடர்ந்து இலங்கையர்கள் பலர் அண்மைய மாதங்களாக சட்டவிரோத மது உற்பத்தியை நாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக சட்டவிரோத மது உற்பத்தி அதிவேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மதுபான விற்பனையும் கணிசமான அளவு குறைந்துள்ளதாக இலங்கை மதுபான உரிமம் வைத்திருப்போர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் டலஸ் பெர்னாண்டோ காட்டு யானைகளை அடக்குவதற்கு பயன்படுத்தப்படும் ட்ரான்குலைசர்கள் உட்பட பல ஆபத்தான இரசாயனங்கள், சட்டவிரோத மது உற்பத்தி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களில் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
இதேவேளை வரிகள் குறைக்கப்பட்டால் அரசாங்கம் தனது வருமானத்தை தற்போதைய 170 பில்லியன் ரூபாவிலிருந்து 300 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க முடியும் என்றும் இலங்கை மதுபான உரிமம் வைத்திருப்போர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.