கெபடிகொல்லேவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட யக்காவெவ வனப் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கெபடிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவராவார்.
மிருகங்களை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பிகளில் சிக்கியதில், இவரிவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கபிதிகொல்லேவா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.