கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்தெல்லாஹியன் ஆகியோரின் இறுதிச் சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில் உள்ள புனித நகரமாக மஷாத்தில் நடைபெற்றது.
இந்த இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1033.png)
கடந்த 2021ஆம் ஆண்டு ஈரானின் அதிபராக பதவியேற்ற கடும் போக்குவாதியான ஈரான் அதிபர் ரைஸியின் இறுதிக் கிரியைகள் அவர் பிறந்த புனித நகரமான மஷாத்தில் நேற்று (23) பிற்பகல் நடைபெற்றது.
மறைந்த ஈரான் அதிபர் மற்றும் ஏனையோருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்டிருந்த அரச தலைவர்களில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி என்பவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1034.png)