கனடாவில் யூத பாடசாலையொன்றின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது கனடாவின் ரொறன்ரோவில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், யூத பாலர் பாடசாலையொன்றின் மீது இவ்வாறு சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பாடசாலைக்கு காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பினை வழங்கியுள்ளதுடன் துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், மக்களின் பாதுகாப்பு மிகவும் முதன்மையானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளதோடு திட்டமிட்ட அடிப்படையில் யூத சமூகத்தின் மீது வெறுப்புணர்வு தாக்குதல் நடத்தப்படுவதாக அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது