Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்

காதலனின் நண்பர்களால் 15 வயதுடைய சிறுமிக்கு நடத்த சம்பவம்

1 year ago
in செய்திகள்

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுளந்தாவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திருமணமான நபர் ஒருவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மற்றொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் காதலனின் நண்பரான, சிரிகல பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய எரந்த என்பவர் மற்றும் அதே பிரதேசத்தை சேர்ந்த நிலந்த என்ற இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 8 ஆம் திகதியன்று மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளதுடன் அவர் வீடு திரும்பாததால் சிறுமியின் தாய் இது தொடர்பாக 9 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் சிறுமி 10 ஆம் திகதி வீட்டிற்கு வந்ததையடுத்து அவரது தாயார் அவளுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவருவதாவது,

குறித்த சிறுமி அவரது காதலனின் நண்பர்கள் இருவரை சந்திக்க தனது மூன்று தோழிகளுடன் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த நிலையில் காதலனின் நண்பர்கள் இருவர், காதலன் அனுப்பிய பணத்துடன் வந்துள்ளனர்.

சிறுமியின் தோழிகள் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளதுடன் சந்தேக நபருடன் வந்தவரும் சென்றுள்ளார்.

சந்தேக நபர் இரவு 7.30 மணி வரை பேருந்து நிறுத்தத்தில் சிறுமியுடன் இருந்துள்ளதுடன், பின்னர் அவர் சிறுமியை அழைத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் சிரிகல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்கு சென்றுள்ளார்.

குறித்த சிறுமி குறித்த வீட்டில் சந்தேக நபருடன் ஒரே அறையில் தங்கியுள்ளதுடன் இதன் போது பல தடவைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல்

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு ஒப்புதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.