இலங்கையிலுள்ள பிரபல காலணி நிறுவனம் ஒன்றின் காட்சியறையில் கார்த்திகை பூ பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காலணிகள் கொழும்பு – வெள்ளவத்தையிலுள்ள காட்சியறையிலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகைப்பூவை அவர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் காலணியில் பயன்படுத்தியமை வடிவமைப்பில் வேண்டுமென்றே உள்வாங்கப்பட்டதா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, குறிப்பிட்ட நிறுவனத்திற்கு இந்த விடயங்களை எடுத்துச் சென்று உற்பத்தியில் இந்த சின்னத்தை தவிர்க்கவும், ஏற்கனவே காட்சி அறையில் உள்ள குறித்த காலணிகளை மீளப் பெறவும் நடவடிக்கை எடுக்க தமிழர்கள் சார்பில் அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.