முல்லைத்தீவில் பெண்கள் மற்றும் பலரை அவதூறாக சமூக வலைதளங்களில் போலி முகநூல் கணக்குகள் ஊடாக அவதூறு பரப்புவதாக குற்றம் சுமத்தப்பட்டு பிரதேச இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். கரைதுரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சின்னராசா யோகேஸ்வரன்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1247.png)
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் போலி பெயரை பயன்படுத்தி பலரை அவதூறு செய்துள்ளார் என தாக்குதல் நடத்துபவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1245.png)
தாக்குதல் நடத்தியவர்கள் சின்னராசா யோகேஸ்வரனின் நெருங்கிய நண்பர்கள் என முல்லைத்தீவு செய்திகள் தெரிவிக்கின்றன, இச் சம்பவம் நேற்று நள்ளிரவில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
போலி முகநூல் கணக்குகள் ஊடாக காணொளிகளை வெளியிட்டு இவர் அவதூறு பரப்பியுள்ளார் என தாக்குதல் மேற்கொண்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது முல்லைத்தீவில் இடம்பெறும் பல சமூக சீர்கேடுகளுடன் குறித்த நபருக்கு தொடர்பு உண்டு என்றும் கூறப்படுகின்றது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1246.png)
கரைதுரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான இவர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தீவிர ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
குறித்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சின்னராசா யோகேஸ்வரனை தொடர்பு கொள்ள முயற்சித்த போது தொலைபேசி செயழிலந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.