இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் இரத்தினபுரி மாவட்டத்தில் 1,311 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் மூன்று வைத்தியர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.