மீன்பிடி நடவடிக்கைகள் குறைவதால் உள்ளூர் சந்தையில் கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகளின் விலை அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் சபை தெரிவித்துள்ளது.
அத்தோடு, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகங்கள் மறு அறிவித்தல் வரை வெளியில் செல்லவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடல் சீற்றம் காரணமாக கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியதால் மீன்பிடி நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளது.
இதனடிப்படையில், உள்ளூர் இறைச்சி விலையானது ரூபா 50 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் சபை தெரிவித்துள்ளது.
மேலும், நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கோழிக்கறியின் மொத்த விலை ரூபா 1080 ஆகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.