திருகோணமலை கந்தளாயில் பார ஊர்தி குடைசாய்ந்ததில் சாரதி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (29) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவமானது கந்தளாய் அக்போபுர காவல் பிரிவிற்குட்பட்ட 86 ஆம் மைல் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், பலத்த காயங்களுக்குள்ளாகிய சாரதி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பார ஊர்தியானது கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பசளை ஏற்றிச் சென்ற போது குடைசாய்ந்ததாகவும் மற்றும் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே இந்த விபத்துக்கு காரணம் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் அக்போபுர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.