வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட மரப்பெட்டியால் வாழைச்சேனையில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட மரப் பெட்டியை லொறியில் இருந்து இறக்கும் போது தவறி விழுந்ததில் இளைஞன் ஸ்தலத்திலேயே மரணடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1276-1024x768.png)
மரணமடைந்த இளைஞன் பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகம்மது றிமாஸ் என்பவராவார்.
இளைஞனின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-29-at-1.14.11-PM-edited.jpeg)