கோறளைப்பற்று வாழைச்சேனையில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஏற்பாட்டில் பொது மக்களின் நன்மை கருதி குடி நீர் வழங்கும் முகமாக நீர்க் குழாய் பொருத்தும் நிகழ்வு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் கொண்டையன் கேணியில் வைபவ ரீதியாக நேற்று மாலை (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-29-at-3.52.41-PM-1024x768.jpeg)
இந் நிகழ்வானது இன்று கோறளைப்பற்று பிரதேசத்தின் கும்புறுமூலை மற்றும் கறுவாக்கேனி ஆகிய கிராமங்களிலும்; முதற் கட்ட நடவடிக்கையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.நவநீதன்,நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நிலையப் பொறுப்பதிகாரி ம.மயூரன் மற்றும் பிரதேச இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர்.