தென் கொரியாவின் பல்வேறு இடங்களில் கழிவுகளுடன் சுமார் 260 பலூன்கள் தரையிறங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பலூன்கள் வடகொரியாவில் இருந்து அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும், தென்கொரிய அதிகாரிகள் பலூன்கள் விழுந்த பகுதிகளில் உள்ளவர்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் பலூன்களை தொடுவதை தவிர்க்குமாறும் அறிவித்துள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-29-at-22.57.09_81d8642d.jpg)
தென்கொரியாவின் 8 அல்லது 9 மாநிலங்களில் வெள்ளை நிற பலூன்கள் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலூன் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-29-at-22.58.45_344fb791-1024x614.jpg)