உலகத்தன்மம் சமூக அமைப்பின் மூலமாக பழமரங்கள் மற்றும் பயிர்க் கன்றுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இவ் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் அனுமதியுடன் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் மரம் நடும் திட்டம் ஆரம்பமாகியது.

அதன் முதல் கட்டமாக திருப்பெருந்துறை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தில் மாணவர்களின் வெளிக்கள ஈடுபாடு, உணவு உற்பத்தி செயற்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு நேற்று முன்தினம் (28) அன்று பழமரக் கன்றுகள், பயிர்க் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாடசாலை வளாகத்தில் அவற்றை நடுவதற்கென பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் பொருத்தமான இடம் ஒன்றினை தெரிவு செய்து மரங்கள் நடப்பட்டன.
மேலும், பாடசாலை வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்கா பகுதியானது சிரமதானம் செய்யப்பட்டு மாணவர்கள் மீண்டும் அப்பகுதியில் விளையாடுவதற்கு ஏதுவான வகையில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டு துப்பரவு செய்யபட்டது.

இப்பணியை திட்டமிட்ட வகையில் செய்து முடிப்பதற்கு அனுமதி வழங்கிய வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர். ஆசிரியர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பணியில் கைகோர்த்த பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், விசேடமாக பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து பணியை வெற்றிகரமாகச் செய்து முடிக்க உதவிய அமைப்பின் உறுப்பினர்கள், ஆலோசனை, வழிகாட்டல்களை வழங்கிய இவ் அமைப்பின் ஸ்தாபர் திரு பயஸ்இராஜேந்திரன் அவர்களுக்கும் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை உலகத்தன்மம் சமூக அமைப்பு சார்பாக தெரிவித்துக் கொண்டனர்.





